https://img.dailythanthi.com/Articles/2020/May/202005272309373242_UK-death-toll-rises-to-37460-after-another-412-die_SECVPF.gif

இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,460 ஆக உயர்வு

இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 37,460 ஆக உயர்ந்துள்ளது.

லண்டன்,உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 57,36,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,54,400 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த வைரஸ் மற்றொரு வல்லரசு நாடான இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 37,460 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 412 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 37,460 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 37 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 2,67,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.  உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்து 5வது இடத்தில் உள்ளது.