‘கொரோனா வைரஸ்’ குறித்த உலகத்தின் முதல் திரைப்படம்... ட்ரைலர் வெளியானது!
by saravanamanojஇயக்குநர் ராம் கோபால் வர்மா உருவாக்கத்தில் உலகின் ‘கொரோனா வைரஸ்’ எனும் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. பல்வேறு நாடுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொது ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அனைத்து நாட்டு ஆராய்ச்சியாளர்களும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உலக மக்களுக்கு பயத்தை காட்டிய கொரோனா வைரஸ் குறித்து முழு நீள திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது.
‘கொரோனா வைரஸ்’திரைப்படத்தை சர்சைக்குரிய இயக்குநர் என கூறப்படும் ராம்கோபால் வர்மா மற்றும் அகஸ்திய மஞ்சு இயக்கியுள்ளனர். CM ப்ரொடெக்ஷன்ஸ் இதனை தாயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 4 நிமிடங்கள் ஓடும் அந்த ட்ரெய்லரில் ஊரடங்கு நேரத்தில் வீட்டில் ஒரு நபருக்கு கொரோனா வந்துவிடுகிறது, அதனை அவரின் குடும்பத்தார் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை த்ரில்லர் பாணியில் காட்டப்பட்டுள்ளது. உலகில் கொரோனா வைரஸை மையமாக உருவாக்கப்பட்டுள்ள முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்தின் ட்ரெய்லரை இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமாணோர் கண்டு ரசித்துள்ளனர்.
ராம் கோபால் வர்மா சமீபத்தில் ஆங்கில நடிகை மியா மல்கோவாவை வைத்து ‘கிளைமேக்ஸ்' எனும் த்ரில்லர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் சுவாரஸ்யமான ட்ரைலர் மற்றும் பாடல்கள் கடந்த வாரம் வெளியானது. இத்திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படும் நிலையில் தற்போது உருவாகியுள்ள ‘கொரோனா வைரஸ்’திரைப்படமும் ஒடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.