https://d13m78zjix4z2t.cloudfront.net/ga_1.png

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகத்தை தாக்க வாய்ப்பு உள்ளதா?.. வேளாண்துறை கொடுத்த விளக்கம்..!

by

தமிழகத்துக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்க வாய்ப்பில்லை என வேளாண்துறை விளக்கமளித்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சூறையாடி வரும் பாலைவன வெட்டுக்கிளிகள், அடுத்த மாதம் இந்தியாவுக்கு படையெடுக்கும் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கிய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்த ஆண்டு பிப்ரவரி வரை தொடர்ந்தது. இதனால் அந்த மாநிலத்தில் 6,70,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், இதன்மூலம் 1000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/gra.png

இந்நிலையில், வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கமளித்துள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் தற்போது காணப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு  தக்காண பீடபூமி பகுதியை ( Deccan Plateau) தாண்டி இதுவரை வந்ததில்லை என கூறியுள்ள வேளாண்துறை, விந்திய மலைகள் இருப்பதால் தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளது. மேலும் வெட்டுக்கிளிகளின் நகர்வு குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.