கர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி!
by nandhakumarகர்நாடகாவில் வரும் 1ந்தேதி முதல் கோயில்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் கோயில்களை திறப்பது தொடர்பாக அம்மாநில இந்து சமய அறநிலையத்துறைய அமைச்சர் கோட்டா ஸ்ரீநிவாஸ் பூஜாரி, முதலமைச்சர் எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர், ஜூன் 1ந்தேதி முதல் கோயில்களை பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அனைத்து பூஜைகள், வழிபாடுகளுக்கு அனுமதி அளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய கோட்டா ஸ்ரீநிவாஸ் தேவைப்பட்டால் பின்னர் அதில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்றார்.
இந்நிலையில், ஊரடங்கின் காரணமாக பூட்டப்பட்ட கோயில்களை திறக்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.