https://d13m78zjix4z2t.cloudfront.net/Tirupati-temple.jpg

ஏழுமலையான் கோயில் சொத்துகளை மறுதணிக்கை செய்ய  முன்னாள் தலைமை அர்ச்சகர் வலியுறுத்தல்!

by

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொத்துக்கள் மற்றும் நகைகள் அனைத்தையும் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என முன்னாள் தலைமை அர்ச்சர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் தலைமை அர்ச்சகராக இருந்து ஓய்வு பெற்ற ரமண தீட்சிதர் என்பவர், கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் கோயிலுக்கு சொந்தமான விலை உயர்ந்த நகைகள் காணாமல் போனதாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் அவர் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு தொடர்ந்தது. 

இதற்கிடையே அர்ச்சகர்களுக்கு வயது வரம்பு கிடையாது என உத்தரவிடப்பட்டதை அடுத்து ரமண தீட்சிதர் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்த நிலையில் அவர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமிக்கு ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமராவ் காலத்தில் இருந்து தற்போது வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துக்கள், நகைகள் மற்றும் பணப்பரிமாற்றம் குறித்து தணிக்கை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். 
இதன் மூலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.