https://d13m78zjix4z2t.cloudfront.net/indians_0.png

வந்தே பாரத் மிஷன் மூலம் 30,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியா வருகை! 

by

வந்தே பாரத் மிஷன் மூலம் இதுவரை 30,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியா திரும்பியுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் மிஷன் மூலம் இம்மாத தொடக்கம் முதல் இரண்டு கட்டங்களாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் இந்தியா திரும்பிவருகின்றனர். 

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இதுவரை வந்தே பாரத் மிஷன் மூலம் 153 விமானங்களில் 30,000க்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும் மீதமுள்ள 49,000 இந்தியர்களும் ஜூன் மாத இறுதிக்குள் இந்தியா வந்தடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்தியாவில் இருந்து 164 விமானங்கள் மூலம் 10,000 பேர் வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.