https://d13m78zjix4z2t.cloudfront.net/coao_0.png

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா உறுதி!

by

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,545  ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 139 பேரும் ( மகாராஷ்ட்ரா 138 பேர் , கேரளா 1 ) அடக்கம். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545 ஆக உயர்ந்துள்ளது. 

பலி எண்ணிக்கை:

தமிழகத்தில் இன்று 6 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 4 பேர் சென்னையை சேர்ந்தவர்களும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஆகும். 

10,000ஐ நெருங்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை : 

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 567 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது. தற்போது 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்:

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 18,545 பேரில், 11,725 பேர் ஆண்கள், 6,815 பேர் பெண்கள். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகம் முழுவதும் இதுவரை 4,23,018 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 10,661 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 558 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,203 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் 40, செங்கல்பட்டு 31, காஞ்சிபுரம் 14, திருவண்ணாமலை 13, திருவாரூர் 5, அரியலூர் 4, திருச்சி 3, தூத்துக்குடி மற்றும் கடலூரில்  2, கள்ளக்குறிச்சி, மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒருவருக்கும் இன்று நோய் தொற்று உறுதியாகியுள்ளது. 

மே மாத கொரோனா பாதிப்பு நிலவரம்:

மே 01 - 2526      மே 11 - 8002       மே 21 - 13967

மே 02 - 2757      மே 12 - 8718      மே 22 - 14753

மே 03 - 3023      மே 13 - 9227      மே 23  -15,512 

மே 04 - 3550      மே 14 - 9674      மே24 -  16,277

மே 05 - 4058      மே 15 - 10108    மே25 -  17,082

மே 06 - 4829      மே 16 - 10585    மே26 -  17,728

மே 07 - 5409      மே 17 - 11224     மே27 - 18,545

மே 08 - 6009      மே 18 - 11760

மே 09 - 6535      மே 19 - 12448

மே 10 - 7204      மே 20 - 13191