https://d13m78zjix4z2t.cloudfront.net/greems.png

முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி புதிய திட்டம்!

by

தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கும் வகையில் செல்போன் செயலியை உருவாக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது அம்பலமானதால், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடரச்சியாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக தெரிவிக்கும் வகையில், செல்போன் செயலியை உருவாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

அனைத்து வகையான செல்போன்களிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் செயலியை உருவாக்க, தகுதியுடைய நிறுவனங்கள் ஜூன் 22-ஆம் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒப்பந்தம் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.