https://d13m78zjix4z2t.cloudfront.net/skoda-rapid.jpg

சவாலான விலையில் களமிறக்கப்பட்டுள்ள புதிய Skoda 2020 Rapid கார்!

by

செக் குடியரசு நாட்டின் புகழ்பெற்றதும், 124 ஆண்டுகள் பழமைவாய்ந்ததுமான SKODA நிறுவனம் ஆற்றல் வாய்ந்ததுடன், அழகிய வடிவமைப்புடன் கூடிய கார்களை தயாரிப்பதில் உலக அளவில் தனக்கென தனி அடையாளத்தை கொண்டுள்ளது. இது ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் ஒரு அங்கமாகும்.

2001ம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஸ்கோடா நிறுவனம், தனது 10வது ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2011ம் ஆண்டில் Rapid மாடல் காரை அறிமுகப்படுத்தியது. வெகுவிரைவாகவே இந்திய கார் பிரியர்கள் மத்தியில் இந்த கார் அபிமானத்தை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2016ம் ஆண்டில் கூடுதல் வசதிகளுடன் இந்த மாடலை மேம்படுத்தி வெளியிட்டது ஸ்கோடா இந்தியா நிறுவனம்.

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/skoda-rapid-01.jpg

இதனை தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ கண்காட்சியில் BS6 தரத்திலான இஞ்சினுடன் கூடிய புத்தம் புதிய ரேபிட் மாடலை ஸ்கோடா காட்சிப்படுத்தியது. கொரோனா பாதிப்பால் நாட்டில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக புதிய ரேபிட் காரினை தற்போது ஸ்கோடா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை போட்டியாளர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

மேம்படுத்தபட்ட புதிய ஸ்கோடா காரின் சிறப்புகள் குறித்து தற்போது காணலாம்.

புதிய ரேபிட் காரில் சில காஸ்மெடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய 16 இஞ்ச் அலாய் வீல்கள், Boot lip ஸ்பாய்லர், ஆட்டோமேடிக் ஹெட்லைட்கள் மற்றும் வைப்பர்கள், LED Drls போன்றவை வெளிப்புற மாற்றங்களாகும்.

பாதுகாப்புக்கு முக்கியவத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக இரண்டு ஏர் பேக்குகள் இணைக்கப்பட்டு தற்போது 4 ஏர் பேக்குகள் புதிய ஸ்கோடா ரேபிட் காரில் இடம்பெற்றுள்ளன.

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/skoda.jpg

* 8.0-inch touchscreen infotainment system with Android Auto, Apple CarPlay and MirrorLink compatibility* climate control
* auto-dimming inside mirror
* rear ac vents
* cruise control
* ABS with EBD

மேற்கண்ட அம்சங்கள் புதிய ஸ்கோடா ரேபிட்டில் இடம்பெற்றிருந்தாலும், சன் ரூஃப், LED ஹெட்லைட், வயர்லெஸ் சார்ஜிங், Electronic stability programme போன்ற அம்சங்கள் இதில் இடம்பெறாதது ஏமாற்றமே.

BS6 1.0 TSI இஞ்சின்:

இப்புதிய ரேபிட் காரின் சிறப்பே அதன் பிஎஸ்-6 இஞ்சின் தான். இதன் 1.0 TSI பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 PS பவரையும், 175 NM டார்க் திறனையும் அளிக்கக்கூடியதாக உள்ளது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு பிறகு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகக்கப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

முந்தைய ரேபிட்டைக் காட்டிலும் கூடுதலாக இக்கார் லிட்டருக்கு 18.97 கிமீ மைலேஜ் தருவதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது.

 

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/skoda-rapid-02.jpg

வேரியண்ட் வாரியான விலை விவரம்:

* Rider  - ரூ.7.49 லட்சம்
* Ambition - ரூ.9.99 லட்சம்
* Onyx - ரூ.10.19 லட்சம்
* Style - ரூ.11.49 லட்சம்
* Monte carlo - ரூ.11.79 லட்சம்

புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்கோடா ரேபிட் காரானது, Hyundai Verna, 5th Gen Honda City, Maruti Ciaz, Volkswagen Vento மற்றும் Toyato Yaris போன்ற மாடல்களுடன் போட்டியில் உள்ளது.

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/skoda-rapid.jpg