https://d13m78zjix4z2t.cloudfront.net/tas_3.png

அரசு நிர்ணயித்த விலையில் தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா? - நீதிமன்றம் கேள்வி

by

மதுபானங்களை கொள்முதல் செய்யும்போது, அவற்றின் தரம் சரிபார்க்கப்படுகிறதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்களில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.  

அப்போது, மதுபானங்கள் தரமாக இருக்கிறதா என சரிபார்த்து கொள்முதல் செய்யப்படுகிறதா? எனவும், அதற்கு ஆதாரம் உள்ளதா? எனவும் கேள்வியெழுப்பி உள்ளனர். இதுவரை, எப்படி கொள்முதல் செய்யப்பட்டது என்று விளக்கம் அளிக்கவும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசு நிர்ணயித்த எம்.ஆர்.பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா? எனவும், மதுபானங்கள் விற்கும்போது, முறையான ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா என்றும் கேள்வியெழுப்பினர். 

ஒவ்வொரு மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா என்றும், அதிக விலைக்கு விற்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஜூன் 26ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.