https://d13m78zjix4z2t.cloudfront.net/po_13.png

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு : 196 பேருக்கு வாழ்நாள் தடை!

by

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய 196 பேருக்கு, வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

2017 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 1,058 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதிய 196 பேர், தலா 25 லட்சம் ரூபாய் பணத்தை கையூட்டாக கொடுத்து அதிக மதிப்பெண் பெற்றது நிரூபிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை நடப்பு ஆண்டில் நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணையை வெளியிட்டு, விண்ணப்ப பதிவை கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. 

இந்நிலையில் கடந்த முறை முறைகேடுகளில் ஈடுபட்ட 196 பேரும் மீண்டும் விண்ணப்பித்திருந்தனர். இதனை அடுத்து அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து, இனி எந்த தேர்வையும் எழுத முடியாதபடி, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.