https://d13m78zjix4z2t.cloudfront.net/ind-cina.png

இந்தியா-சீனா எல்லைப் பதற்றம் எதிரொலி: இந்தியாவில் உள்ள பிரஜைகளை தாயகம் மீட்டுச்செல்ல சீனா தீவிரம்!

by

இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவில் உள்ள சீனர்களை தாயகம் அழைத்துச் செல்ல தீடீரென விமானங்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ள சம்பவம் இருநாடுகளிடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு விமான சேவையை மத்திய அரசு நிறுத்தியது. இதனால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் தொழில் முறையாக இந்தியா வந்தவர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கித்தவித்து வந்தனர்.இதனை அடுத்து மலேசியா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பயணிகள் சொந்த நாடுகளின் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு விமானம் மூலம் தாயகம் சென்றடைந்தனர்.  ஆனால் சீனாவில் தற்போது இயல்புநிலை திரும்பிய பின்னரும் இந்தியாவில் உள்ள சீனர்களை தாயகம் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்காமால் இருந்துவந்தது. 

இதனிடையே கடந்த சில தினங்களாக இந்தியா சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே சிக்கீம் மற்றும் லடாக் எல்லையில் அத்துமீறி நுழைந்தது தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் இரு நாடுகளும் எல்லையில் நாளுக்கு நாள் படைகளை குவித்து வருவதால் அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது. 

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/si_2.png

இந்நிலையில் ஊரடங்கால் இந்தியாவில் சிக்கியுள்ள சீனர்களை மீட்க அந்நாடு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் சீன மாணவர்கள், தொழில் முனைவோர், மற்றும் சுற்றுலாப் பயணிகளை தாயகம் அழைத்துச் செல்ல சீனா திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே எல்லை பிரச்சனையால் பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில் இந்தியாவில் உள்ள தனது பிரஜைகளை தாயகம் அழைத்துச் செல்ல சீனா தீவிரம் காட்டிவரும் சம்பவம் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள விரிசலை வெளிச்சப்படுத்தியுள்ளது.