https://d13m78zjix4z2t.cloudfront.net/tas_4.png

திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாக மதுப்பிரியர்கள் புகார்!

by

திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் இலவம்பேடு கிராமத்தில் உள்ள மதுக்கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக, மது குடிப்பவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பீர் பாட்டில் ஒன்றின் விலை 140 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும், கடைகளில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக மது குடிப்பவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பொன்னேரி காவல் உதவி கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டியிடம் மது குடிப்பவர்கள் புகார் மனு அளித்தனர். அதிக விலை கொடுக்கவில்லை என்றால், மதுவை வழங்க மறுப்பவதாகவும் புகாரில் தெரிவித்திருந்தனர். 

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 70-க்கும் மேற்பட்ட அரசு மதுக்கடைகளிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. டாஸ்மார்க் மண்டல அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.