ஊரடங்கு: மார்ச் 24 முதல் மே 24 வரை மொத்தம் 24 பேர் தற்கொலை – அதிர வைத்த ஒற்றை மாவட்டம் – மின்முரசு

ஊரடங்கு தொடங்கிய மார்ச் 24 முதல் மே 24 வரை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

டேராடூன்:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. விவசாயம் சார்ந்த தொழில்களும் பாதிக்கப்பட்டது. 

ஊரடங்கு காரணமாக பலர் வேலை இழந்து பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகினர். இதனால், சிலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் கொடிய முடிவுகளையும் எடுத்தனர்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் டும்கா மாவட்டத்தில் ஊரடங்கு தொடங்கிய நாளான மார்ச் 24 முதல் மே 24 வரையிலான இரண்டு மாதங்களில் மொத்தம் 24  பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 20 பேர் தூக்கிட்டும், 4 பேர் விஷம் குடித்தும் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். பயம், கவலை, தூக்கமின்மை, கோபம் போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய தற்கொலைகள் நடந்திருக்கலாம் என மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், ஊரடங்கின் போது டும்கா என்ற ஒற்றை மாவட்டத்தில் நடந்த இத்தனை (24) தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

காலில் வளையம், மர்ம எண்கள்: ரகசிய தகவல்களை அனுப்பவா? பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த புறாவென்டிலேட்டர் வாங்கியதில் ஊழல் – சுகாதாரத்துறை மந்திரிக்கு 3 மாதங்கள் சிறை

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005270306109482_Tamil_News_Saudi-Arabia-COVID-19-cases-surpass-76000_SECVPF.gif

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 76 ஆயிரத்தை தாண்டியது

murugan May 27, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005270157176581_Tamil_News_The-total-number-of-positive-cases-in-the-Dharavi-increases_SECVPF.gif

தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1621 ஆக உயர்வு

murugan May 27, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005270131403960_Tamil_News_coronovirus-death-toll-crosses-35-lakhs-in-world_SECVPF.gif

கொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்தது

murugan May 27, 2020 0 comment