ஹிமாச்சல பிரேதேசத்தில் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில், ஊரடங்கு, மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, இந்த மாத இறுதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஹிமாச்சலில் இதுவரை, 214 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் இறந்துள்னர். 63 பேர், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக, ஹமிர்பூரில், 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான்காம் கட்ட ஊரடங்கு, வரும், 31ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கை, மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து, முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், நேற்று உத்தரவிட்டார். இதன்படி, வரும், ஜூன், 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை தளர்த்தினால், வைரஸ், சமூக பரவலாக மாறி விடும் என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளதால், ஊரடங்கை நீட்டித்துள்ளதாக, மாநில அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE