பொது போக்குவரத்து தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
by Murali, Manoshankarகொழும்பு மற்றும் கம்பஹாவில் நாளைய தினம் பொது போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பாது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
கொழும்பு மற்றும் கம்பாஹாவில் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற போதிலும், வழமைப் போல் பொதுப் போக்குவரத்து மீண்டும் இடம்பெறுவதறக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே குறித்த இரண்டு மாவட்டங்களிலும், பொது போக்குவரத்து இடம்பெறாது.
இதன்படி ஏனைய பகுதிகளிலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் அவிசாவலை, நீர்கொழும்பு, நிட்டம்புவ மற்றும் பானந்துரையுடன் தங்கள் பயணங்களை நிறுத்திவிடும்.
![https://img.zoftcdn.com/com/files/2020/01/safe.png https://img.zoftcdn.com/com/files/2020/01/safe.png](https://img.zoftcdn.com/com/files/2020/01/safe.png)
அதேவேளை, பேருந்துகள் இந்த வரம்புகளுக்கு மட்டுமே பயணிப்பதாகவும், அதற்கேற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும் என தெளிவாக அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்து சேவைகள் நாளை மீண்டும் தொடங்கும்.
அதே வேளையில், ஆசனங்களின் எண்ணிக்கையின்படி மட்டுமே பயணிகளை அழைத்துச் செல்வதற்கான கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.