http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__25219142436982.jpg

கொரோனா அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள், நோய் எதிப்பு சக்தியை அதிகரித்தல், வீட்டு கண்காணிப்பு பரிசோதனை முறை குறித்த முழு விவரங்கள்....!

கொரோனா வைரஸ்

இது வேகமாக பரவக்கூடிய ஒரு தொற்று

நோயின் முக்கிய அறிகுறிகள்

· காய்ச்சல்
· வறட்டு இருமல்
· சளி
· மூச்சுத் திணறல்

கீழ்காணும் அறிகுறிகளும் சேர்ந்து வரலாம்

· உடல்சோர்வு
· தலைவலி
· நாக்கில் சுவை இழப்பு
· மூக்கில் நுகர்வு தன்மை இழப்பு

கொரோனா வைரஸ் நோய் பரவும் விதம்

· இருமல் மற்றும் தும்மல் வரும்போது வெளிப்படும் நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பாது கைகள் மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. ஒருவருக்கு வரும் தொற்று ஒரு மாதத்தில் 40 பேருக்கு பரவும்.

நோய் தடுப்பு நடவடிக்கைகள்

^ அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவவேண்டும்.

* இரண்டு மணிக்கு ஒரு முறை

* இருமிய பின்பும், தும்மிய பின்பும்

* உணவு சமைப்பதற்கு முன் பின்

* உணவு சாப்பிடுவதற்கு முன் பின்

* கழிவறையை பயன்படுத்திய பின்

* விலங்குகளை கையாண்ட பின்

* குப்பைகளை தொட்ட பின்

* கைகள் அழுக்குடன் - கறையுடன் தென்பட்டால்

* நோய் அறிகுறி உள்ளவர்களை கவனித்துக்கொள்ளும்போது

^ இருமும் போதும், தும்மும் போதும், வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடி கொள்ளவேண்டும்.

^ கண், மூக்கு, வாய் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
 
^ காய்ச்சல், இருமல், சளி உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் கலந்துகொள்வதையும் அறவே தவிர்க்க வேண்டும்.

^ அத்தியாவசியப் பொருட்களை வாங்க செல்பவர்கள் முகக் கவசம் அணிவதோடு, ஒருவருக்கொருவர் கூடிபேசுவதை தவிர்க்க வேண்டும். அதோடு சமூக இடைவெளியான 3 அடியை கடைப்பிடிக்கவும்.

வீட்டில் கடைப்பிடிக்க வேண்டியவை;

^ 1 லிட்டர் தண்ணீரில் 10 மிலி பிளீச்சிங் பவுடர் கலந்து தரையை சுத்தம் செய்து, வீட்டை எப்போழுதும் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.

^ கதவின் கைப்பிடி, படிக்கட்டின் கைப்பிடி, மின்தூக்கியின் பொத்தான், மேஜையின் மேற்பரப்பு ஆகியவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

· நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

· பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

· பால், மோர், இளநீர் போன்றவை அருந்தலாம்.

· நீராவி பிடிக்கலாம்

· மிதமான சூடான பாலில் சிறிதளவு மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.

· உங்கள் இருப்பிடத்திலேயே தினமும் 15-20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்கவும் (காலை 10 மணிக்குள், மாலை 4 மணிக்கு பிறகு)

· ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்கவும்.

· சுக்கு, திப்பிலி, ஆடதோடா போன்ற 15 மூலிகைகள் கொண்ட கபசுர குடிநீர் அருந்தலாம். ஒரு தேகரண்டி கபசுர பொடியுடன் 240 மி.லி. தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அது 60 மி.லி. அளவு சுண்டியவுடன் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை உணவுக்கு முன் (குழந்தைகளுக்கு 30 மி.லி. பெரியவர்களுக்கு 60 மி.லி. ) அருந்த வேண்டும். அதோடு, மருத்துவரின் ஆலோசனை படி வைட்டமின் மாத்திரைகள் மற்றும் சிங்க் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.

நாள்பட்ட நோய் உள்ளவர்கள்

· வீட்டில் வயதானோர், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நாள்பட்ட வியாதி உடையோர் வெளியே போகாமல் தனியாக இருக்க வேண்டும்.

· நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், தீவிர மூச்சுத் திணறல் மற்றும் காசநோய், இருதய நோய், சிறுநீரக கோளாறு, புற்று நோய் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளவேண்டும்.

தினமும் கண்காணிக்கப் பட வேண்டியவை

· தங்களது உடல் நிலையை காலையிலும், மாலையிலும் கூர்ந்து கண்காணித்து வரவேண்டும்.

· உடலின் வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட் குறைவாக இருக்க வேண்டும்.

· நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 70 லிருந்து 100க்குள் இருக்க வேண்டும்.

· சுவாசம் சராசரியாக நிமிடத்திற்கு 16-18 முறை சுவாசிக்க வேண்டும்.

· இரத்தத்தில் பிராணவாயு அளவு 95ரூ முதல் 100ரூ வரை இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அளவுகள் குறைந்தோ அல்லது மேற்பட்டோ இருந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்தி இருத்தல்

· வீட்டில் தனி அறையில் தனிமைப்படுத்திக் கொண்டு சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதையே வீட்டில் தனிமைப்படுத்தி இருத்தல் ஆகும்.

· வீட்டில் உள்ளவர்களுக்கும், பிறருக்கும் நோய்க்கிருமி பரவுவதைத் தடுப்பதற்காக வீட்டில் தனிமைப்படுத்தி இருத்தல் வேண்டும்.

· வெளிநாடு அல்லது வேறு மாநிலத்திலிருந்து திரும்பியவர் அல்லது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவரோடு உடன் இருந்தவர் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
 
தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

· தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு, நல்ல காற்றோட்டமான அறை மற்றும் தனி கழிப்பறை ஒதுக்க வேண்டும். அந்த நபர் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே இருக்க வேண்டும்.

· வீட்டில் ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு பராமரிப்பு பணிகளை செய்தல் வேண்டும்.

· வீட்டில் உள்ள அனைவரும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்.

· வீட்டில் உள்ள அனைவரும் மூன்றடுக்கு முகக்கவசத்தை தொடர்ந்து அணிந்திருக்க வேண்டும். 8 மணி நேர பயன்பாடு அல்லது ஈரத் தன்மை ஏற்பட்டவுடன் முகக் கவசத்தை மாற்ற வேண்டும்.

· தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களையும் தனிமைப்படுத்த வேண்டும்.

· தனிமைப்படுத்தப்பட்டவரின் உடைகள், படுக்கை விரிப்பு போன்றவற்றை உதறாமல், முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து தனியாக சோப்பு நீரில் ஊறவைத்து துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.

· தனிமைப்படுத்தப்பட்ட நபர் உள்ள அறை மற்றும் அடிக்கடி தொடும் பொருட்களான மேசை, கைப்பிடி, கதவு தாழ்ப்பாள்கள் போன்றவற்றை தினமும் மூன்று முறையாவது கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

· முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை கழற்றிய பின் கைகளை நன்கு சோப்பு உபயோகித்து கழுவ வேண்டும்.

· தனிமைப்படுத்தப்பட்டவருக்கு, காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.