http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__750499904155732.jpg

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக தந்த நிலங்களை விற்கும் முடிவு கைவிடல்

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நிலங்களை விற்பனை செய்வதை நிறுத்தி ஆந்திர மாநில அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. பக்தர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு நிலத்தை விற்பனை செய்வதை மறுபரிசீலனை செய்யும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்து மத தலைவர்கள், பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகளின் ஆலோசனைகளை பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ள நிலத்தில் தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்டுவது, இந்து மத பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது மற்றும் இதர ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து நடவடிக்கைகளையும் பரிசீலனை செய்யும் வரை விற்பனை செய்வதை நிறுத்தும்படி ஆந்திர மாநில அரசு இன்று புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.