சென்னையில் இருந்து நாளை சர்வதேச விமானங்கள் இயக்கம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 9.25 மணிக்கு அபுதாபிக்கு விமானம் இயக்கப்படுகிறது. நாளை காலை 9.25 மணி அளவில் சென்னையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அபுதாபி செல்கிறது. சென்னையில் முதல் விமானமாக நாளை காலை 5.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் அந்தமான் செல்கிறது. சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து மொத்தம் 40 விமானங்கள் இயக்க்கப்பட உள்ளன.