https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/nk21train1060759.jpg

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இதுவரை 3,060 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன: இந்திய ரயில்வே

by

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இதுவரை 3,060 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுபற்றி இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

மே 25 காலை 10 மணி நிலவரப்படி, நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3,060 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 2,608 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன, இன்னும் 453 ரயில்கள் இயக்கப்படுகின்றன. மே 24-ஆம் தேதியன்று, 3.1 லட்சம் பயணிகளுடன் 237 சிறப்பு ரயில்கள் இயங்கின.

குஜராத் - 853 ரயில்கள், மகாராஷ்டிரம் - 550 ரயில்கள், பஞ்சாப் - 333 ரயில்கள், உத்தரப் பிரதேசம் - 221 ரயில்கள், தில்லி - 181 ரயில்கள் ஆகிய 5 மாநிலங்களிலிருந்துதான் அதிகளவில் ரயில்கள் இயக்கப்பட்டன.

உத்தரப் பிரதேசம் - 1,245 ரயில்கள், பிகார் - 846 ரயில்கள், ஜார்கண்ட் - 123 ரயில்கள், மத்தியப் பிரதேசம் - 112, ஒடிஸா - 73 ரயில்கள் ஆகிய 5 மாநிலங்களுக்குதான் அதிகளவில் ரயில்கள் இயக்கப்பட்டன.