![https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/7/original/earthquake052024.jpg https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/7/original/earthquake052024.jpg](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/7/original/earthquake052024.jpg)
மணிப்பூரில் நிலநடுக்கம்
by DINமணிப்பூரில் இன்று (திங்கள்கிழமை) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங் பகுதியின் மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில், இரவு 8.12 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. குவாஹட்டி மற்றும் அசாமிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இது சில விநாடிகள் மட்டுமே உணரப்பட்டது. இதனால் எவ்வித சேதமும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.