மாளிகாவத்தை சம்பவம் நாட்டு மக்களின் அவல நிலையை எடுத்துகாட்டுகின்றது! ரணில்
by Murali, Manoshankarஅண்மையில் மாளிகாவத்தையில் மூவர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களின் அவல நிலையை எடுத்து காட்டுகின்றது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மை தன்மையினை பொது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இன்று மக்கள் வாழ்வது கடினமாகியுள்ளது. பணம் இல்லை, வேலைகள் இல்லை, வருமான ஆதாரங்களும் இல்லை. நாளுக்கு நாள், விலைகள் உயர்கின்றன.
தற்போதைய அரசாங்கம் நிதிநெருக்கடியை சந்தித்து வருகிறது. ஆனால் அந்த பிரச்சினைகளை முகாமைசெய்ய இன்னும் சிறந்த பொருளாதாரத் திட்டத்தை வகுக்கவில்லை.
மாலைத்தீவு எமக்கு சிறந்த உதாரணம். அங்கு ஏப்ரலில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு யோசனைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. நாங்கள் இன்னும் பின்னடைவில் உள்ளோம்.
இப்போது முதல் 2023 வரை, இலங்கையில் 10 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சேவை உள்ளது. இந்த ஆண்டு மட்டும் இலங்கை 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த வேண்டும்,
அக்டோபரில் ஒரே நாளில் நாடு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும். இந்நிலையில், வருவாயைப் பெறுவதற்கு குறுகிய கால தீர்வுகள் தேவை என்று” அவர் மேலும் கூறியுள்ளார்.