இடைவெளியை கடைப்பிடிக்க தவறும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
நாளை (26) முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பம்பலபிட்டியவில் அமைந்துள்ள பொலிஸ் களப்படைத் தலைமையகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு காரணங்களுக்காக வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அதேபோல் எல்லா சந்தர்பங்களிலும் சமூக இடைவெளியை பேண வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்தால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.