மகாராஷ்டிராவில் மேலும் 2436 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் மேலும் 2436 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52667-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனவால் 60 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1695-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 1186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,786-ஆக அதிகரித்துள்ளது.