https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2546306.jpg

ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா? முதல்வர் இன்று ஆலோசனை!

சென்னை,: ஊரடங்கை தளர்த்துவது குறித்து, மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர், இ.பி.எஸ்., இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகத்தில், நான்காம் கட்ட ஊரடங்கு, வரும், 31ல், நிறைவடைய உள்ளது. தற்போது, ஊரடங்கு அமலில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்து உள்ளது.சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில், ஆட்டோக்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

https://img.dinamalar.com/data/gallery/gallerye_013413916_2546306.jpg

சலுான்கள் மற்றும் அழகு நிலையங்கள் உட்பட, அனைத்து கடைகளும் திறக்க அனுமதி தரப்பட்டு உள்ளது.போக்குவரத்துக்கு பஸ்கள் இயக்கப்படாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் உள்ளது. ஜூன், 1ல், ஊரடங்கு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.ஆனால், சென்னை உட்பட, சில மாவட்டங்களில், கொரோனா நோய் பரவல் அதிகரித்தபடி உள்ளது.

எனவே, ஊரடங்கு முழுமையாக விலக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என, கூறப்படுகிறது.ஊரடங்கை தளர்த்தலாமா அல்லது நீடிக்க வேண்டுமா என்பது குறித்து, தலைமை செயலகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு, மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார்.மருத்துவ குழுவினர் பரிந்துரைக்கேற்ப, அடுத்த கட்ட நடவடிக்கைகளை, அரசு மேற்கொள்ளும்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE