கரோனா தொற்று: பிற மாநிலங்கள் நிலவரம்
by DINகரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பிற மாநிலங்களில் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,436 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 52,667 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 60 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,695 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,186 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, இதுவரை மொத்தம் 15,786 பேர் குணமடைந்துள்ளனர்.
குஜராத்:
குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 405 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 14,468 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 888 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் இன்று புதிதாக 149 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,816 ஆக உயர்ந்துள்ளது.
கோவா:
கோவாவில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. 48 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மணிப்பூர்:
மணிப்பூரில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இதில் 32 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஜார்கண்ட்:
ஜார்கண்டில் இன்று புதிதாக 25 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 403 ஆக உயர்ந்துள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசம்:
ஹிமாச்சலப் பிரதேசத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிலாஸ்பூரிலிருந்து 3 பேர், ஷிம்லாவிலிருந்து ஒருவர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 221 ஆக உள்ளது. 150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.