ஒரு இலங்கையருடன் கட்டுநாயக்க வந்த விமானம்!

by

தென் ஆபிரிக்காவிலிருந்து நாடுதிரும்ப முடியாமல் கடந்த இரண்டு மாதங்களாக சிரமங்களுக்கு உள்ளான இலங்கையர் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.

எமிரேட்ஸ்க்கு சொந்தமான விமானத்தில் இன்று மாலை 6.45 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இவர் எமிரேட்ஸ் ஏயார்லைன்ஸில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியற்றி வரும் நிலையில், மேலதிக பயிற்சிக்காக தென் ஆபிரிக்காவிற்கு சென்றிருந்த போது கொரோனா நெருக்கடி காரணமாக நாடுதிரும்ப முடியாது இருந்தார்.

இதனையடுத்து இன்று மாலை டுபாயிலிருந்து இலங்கையின் கட்டுநாயக்க விமானநிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார்.