எங்கள் மாநில தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது: யோகி ஆதித்யநாத் – மின்முரசு
பல மாநிலங்களில் தவித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், உ.பி. முதல்வர் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநில தொழிலாளர்களை பிற மாநிலங்களில் வேலைக்கு எடுக்கும்போது உத்தரப் பிரதேச மாநில அரசிடமிருந்து முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியதாவது:-
உத்தர பிரதேச தொழிலாளர்கள் மாநிலத்திற்குள் வேலை வாய்ப்பை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான உத்தரவை நான் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளேன்.
மற்ற மாநிலங்களுக்கு உத்தர பிரதேச தொழிலாளர்கள் தேவைப்பட்டால் அவர்கள் எங்களிடம் அனுமதி பெற வேண்டும். ஏனென்றால் எங்களது மாநில மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar
murugan
Post navigation
ராகவா லாரன்ஸ் உடைடில் தங்கியிருக்கும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி5 வயது சிறுவனின் அசாத்திய விமானப்பயணம்
Related Posts
சிம்பு அப்பவே சொன்னார் இந்த மாதிரி வரும் என்று…. கவுதம் மேனன்
murugan May 26, 2020 0 comment
பிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்
murugan May 26, 2020 0 comment