http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__207775294780732.jpg

தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை; 12% அறிகுறியில் காய்ச்சல் அதிகமாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 12% பேருக்கு மட்டுமே அறிகுறி இருந்தது எனவும் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த மருத்துவர்கள் முயன்று வருகிறார்கள். அந்த வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் கொரோனா வைரஸ் மனித உடலில் என்ன வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதையே இன்னமும் புரிந்து கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள் மருத்துவர்கள். இதன் அறிகுறிகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. பொதுவாக இந்த வைரஸ் தாக்கியிருந்தால், மூன்று வித்தில் கண்டறிய முடியும்.

அதாவது, முதல் அறிகுறி இருமல், வறட்டு இருமல், காய்ச்சல், உடல் சூடு அதிகரித்தல் போன்றவையாகும். ஆனால், தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமல் பரவி வருகிறது. தமிழகத்திலும் கூட இப்படி அதிகமாக நடக்கிறது. உதாரணமாக தமிழகத்தில் அதிகப்பற்றமாக நோயாளிக்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை. அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையிலும் எதிர்மறை முடிவுகளே வந்தது. ஆனால் 21 நாட்கள் கழித்து திடீர் என்று அறிகுறி ஏற்படுகிறது. பின் சோதனை செய்தால் பாசிட்டிவ் என்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 17,082 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 88% பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது;

^ தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை; 17,082

  * கொரோனா அறிகுறியுடன் பாதிக்கப்பட்டவர்கள்; 12% பேர்

  * கொரோனா அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள்; 88% பேர்

^ கொரோனா அறிகுறியுடன் பாதிக்கப்பட்ட 12% பேரில் அதிகப்பற்றமாக காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் பதிக்கப்பட்டுள்ளனர். விவரம் பின் வருமாறு;

   * காய்ச்சல் - 40%

   * இருமல்   - 37%

   * தொண்டை வலி - 10%

   * மூச்சுத்திணறல்  - 9%

   * மூக்கில் நீர் வடிதல் - 4%

^ நீரழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்கனவே இருந்தவர்கள் தான் 84% பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.

^  கொரோனா பாதிப்பால் இதுவரை மொத்தம் 118 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் விவரம்;

   * வேறு நோய் பாதிப்பு இருந்தவர்கள்; 84%, 99 பேர்
 
   * வேறு நோய் பாதிக்கத்தவர்கள்  ; 16%, 19 பேர்

^ கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 50 சதவீதத்திற்கும் மேலானோர் முதியவர்கள் ஆவர். வயது விவரம்;

    * 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்; 46.5%, 55 பேர்

    * 41-60 வயதுக்கு உட்பட்டவர்கள் ; 46.5%, 55 பேர்

    * 21-40 வயதுக்கு உட்பட்டவர்கள் ; 7%, 8 பேர்