http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__99788844585419.jpg

சிகிச்சை முடிந்து தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திடீரென அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் 12.30 மணியளவில் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். முதல்வருடன் தமிழக அமைச்சர்களும் சென்று  துணை முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். இதனை அடுத்து எம்.ஜி.எம். மருத்துவமனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. இன்று மாலை வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனை முடிந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பினார்.