https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/12/original/Corona_Test_123.jpg

தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கரோனா தொற்று

by

தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார். இதன்படி, தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 93, தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யபட்டவர்கள் 712. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 549 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 7 பேர் பலியானதையடுத்து, தமிழகத்தில் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று ஒரே நாளில் 407 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 8,731 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் மொத்தம் 8,230 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று ஒரு நாளில் மட்டும் 11,428 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் 4,02,680 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.