https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/original/ops.jpg

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஓபிஎஸ்!

by

வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனை தான் என்றும் இன்று மாலையே அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சிகிச்சை முடிந்து அவர் சற்றுமுன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். 

இதற்கிடையே, சிகிச்சை பெற்று வந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுகவினரும் உடன் சென்றனர்.