
இலங்கையில் மேலும் 02 பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1164 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 695 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 459பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.