சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,125 ஆக அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: சென்னையில் இன்று மட்டும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,125 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு விகிதம் 65.12 % ஆக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.