http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__507503688335419.jpg

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,731-ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 118-அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 407 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,731- ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 118-ஆக அதிகரித்துள்ளது.