மகாராஷ்டிரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தவருக்கு கரோனா தொற்று உறுதி
by DINஸ்ரீவில்லிபுத்தூர்: மகாராஷ்டிரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என 190 பேரை பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்தவர்களை வருவாய்த்துறை சுகாதாரத் துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.
இதில் 190 பேருக்கும் கடந்த 22ம் தேதி ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் 24.05.2020 அன்று 100 பேருக்கு ரத்த மாதிரிகள் முடிவுகள் வந்ததில் யாருக்கும் எவ்வித நோய்த்தொற்றும் இல்லை என்பது உறுதியானது
மேலும் திங்கள்கிழமை 90 பேருக்கு முடிவுகள் வந்தன. இதில் 89 பேருக்கு எந்த நோய்த் தொற்றும் பாதிப்பும் இல்லை.
இதில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள துள்ளுகுட்டி நாயக்கனர் கிராமத்தைச் சேர்ந்த மகாராஷ்டிராவில் பணியாற்றி வந்த 20 வயதுடைய ஆண் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 190 பேரில் ஒரே ஒருவருக்கு மட்டும் கரோனா வைரஸ் தொற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.