https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/21/original/coronatest.jpg

இமாச்சலில் இரு மாவட்டங்களில் மட்டும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

by

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர், சோலன் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று அதிகமாக இருப்பதன் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மற்றும் சோலன் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹமிர்பூரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 63 ஆகவும், சோலன் மாவட்டத்தில் 21 ஆகவும் உள்ளது. மாநிலத்தில் மொத்தமாக 5 உயிரிழப்புகள் உள்பட 214 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.