மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் நீண்ட நாட்களுக்கு பின்னர் தொழிலுக்கு தயார்

by

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றதை தொடர்ந்து சாய்ந்தமருது,மாளிகைக்காடு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆழ்கடலில் ஏற்கனவே போடப்பட்ட ஒரு சில மீனவர்களின் வலைகள் கடல் கொந்தளிப்பு காரணமாக கடலோடு சென்ற நிலையில் இருக்கின்ற வலைகளை வைத்து இன்று தொழிலை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை சம்மாந்துறை,மாளிகைக்காட்டு பிரதேசத்தை சேர்ந்த சில மீனவர்கள் தமது வள்ளங்களுடன் மீன்பிடிப்பதற்காக நேற்று கடலுக்குள் சென்ற போதிலும் மீன்பிடி குறைவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் ஆழ்கடல் மீனவர்கள் தமக்கான மீன்பிடித்துறைமுகமான ஒலுவில் அமைந்துள்ள துறையை விரைவாக நிர்மாணிக்க உதவுமாறு கேட்டுள்ளனர்.

இதேவேளை ஒரு சில மீனவர்கள் பழுதடைந்த தங்களது வலைகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

இதேநேரம் அண்மைக்காலமாக மீனவர்கள் கடலரிப்பு, கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமது தொழிலை இழந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2020/k_tl001/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2020/k_tl002/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2020/k_tl003/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg