https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/15/original/corona1.jpg

கேரளத்தில் புதிதாக 49 பேருக்கு கரோனா தொற்று

by

கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 49 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அந்த மாநிலத்தில் இன்று புதிதாக 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 532 பேர் குணமடைந்துள்ளனர்.