சச்சின் டெண்டுல்கர் அளித்த ஆலோசனைகள்: பிரித்வி ஷா
by DINதன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் டெண்டுல்கர் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார்.
இன்ஸ்டகிராம் உரையாடலில் பிரித்வி ஷா கூறியதாவது: சச்சின் டெண்டுல்கரை முதல்முதலாக என்னுடைய 8-வது வயதில் சந்தித்தேன். அதுமுதல் அவரே என்னுடைய ஆலோசகராக உள்ளார். ஆட்டத்துக்கு வெளியேயும் உள்ளேயும் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது போன்றவற்றை அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.
நான் பயிற்சி செய்ய செல்லும்போது சச்சின் சார் அங்கு இருந்தால் என்னிடம் வந்து பேசுவார். தொழில்நுட்ப ரீதியில் இல்லாமல் மனத்தளவில் ஆட்டத்தை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்குவார் என்று கூறியுள்ளார்.
20 வயது பிரித்வி ஷா, 4 டெஸ்டுகளும் 3 ஒருநாள் ஆட்டங்களும் விளையாடியுள்ளார். டெஸ்டில் 335 ரன்களும் ஒருநாள் ஆட்டங்களில் 84 ரன்களும் எடுத்துள்ளார்.