https://s3.amazonaws.com/adaderanatamil/1590407539-1588873902-Corona_New_L.jpg

இந்நாட்டின் பத்தாவது கொரோனா மரணம் பதிவானது

இந்நாட்டின் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மங்கிபிரிட்ஜ் இராணுவ  முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்களில் 52 வயதான பெண் ஒருவர் இன்று அதிகாலை மரணமானதாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த பெண் இருதய நோயாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 21 திகதி குவைத்திலிருந்து நாடு திரும்பி 162 நபர்களை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருந்த நிலையில் இம்மரணம் இடம்பெற்றுள்ளது.

இறந்தவர் 52 வயதான பயாகல்ல பிரதேசவாசி என இன்று அதிகாலை 4.30 மணியளவில் மரணம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பொதிசெய்யப்பட்ட நிலையில் இராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் இரத்தமாதிரியும் அவருடன் தங்கி இருந்த இருவரின் இரத்தமாதிரிகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொரோனா நோய் தொற்று சம்பந்தமான பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 21 திகதி கட்டார் நாட்டிலிருந்து 142 நபர்கள் நாடு திரும்பி நிலையில் திருகோணமலை கிளம்ப்பம் பேக் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-திருகோணமலை நிருபர் கீத்-