https://s3.amazonaws.com/adaderanatamil/1590406316-IMG-20200525-WA0009.jpg

மட்டு வவுணதீவில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகிபுரம் பாவற்கொடிச்சேனை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவரை நேற்று (24) இரவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ஒன்றையும் மிட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து  சம்பவதினமான நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் குறித்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை சட்ட விரோதமாக வைத்திருந்த ஒருவரை கைது செய்ததுடன் துப்பாக்கியை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-