விடுதியில் இருக்கும் மாணவர்களை சொந்த ஊருக்குச் செல்ல அறிவுறுத்தியது ஜே.என்.யூ.

by

விடுதிகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புமாறு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் 4 ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையே, பல்வேறு காரணங்களுக்காக புலம் பெயர்ந்தவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தங்கள் விடுதியில் உள்ள மாணவர்களை சொந்த ஊருக்குத் திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது. கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், வகுப்புகள் தாமதகமாகத்தான் தொடங்கும் என்பதாலும் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.