கமல் படத்தில் நான் நடிக்கவில்லை: பூஜா குமார்
by DINஇந்தியன் 2 படத்துக்குப் பிறகு கமல், தலைவன் இருக்கின்றான் என்கிற படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் எனக் கூறப்படுகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன. இசை - ஏ.ஆர். ரஹ்மான். விஜய் சேதுபதி, வடிவேலு ஆகியோர் நடிப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படங்களில் கமலுடன் இணைந்து நடித்த பூஜா குமார், தலைவன் இருக்கிறான் படத்திலும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி ஒரு பேட்டியில் பூஜா குமார் கூறியதாவது: தலைவன் இருக்கிறான் படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் ஒருவேளை நாளை இந்தப் படத்தில் நடிக்கவும் செய்யலாம் என்று கூறியுள்ளார்.