குவைத்திலிருந்து வந்த இலங்கையர்களுக்கு உதவியவர்களுக்கு பரிசோதனை!

by

குவைட்டிலிருந்து வந்த இலங்கையர்களுக்கு உதவியோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 19ம் திகதி குவைட்டிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் பல்வேறு வழிகளில் சேவைகளை வழங்கிய விமான நிலையப் பணியாளர்கள், சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் படையினர் ஆகியோருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த பணியாளர்கள் மற்றும் படைவீரர்கள் அவசர பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குவைட்டிலிருந்து நாடு திரும்பிய 466 பேரில் 70 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பரவியுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாகவே இவ்வாறு பரிசோதனைகளை அவசரமாக நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.