அரசாங்கம் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து மக்களிடம் மூடி மறைக்கக் கூடாது!ரணில்

by

அரசாங்கம் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து மக்களிடம் மூடி மறைக்கக் கூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நிதி நிலைமைகள் குறித்து விரிவான அறிக்கையொன்றை அரசாங்கம் மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்த வேண்டுமேன வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மக்களிடம் உண்மையைக் கூற வேண்டிய கடப்பாடு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதி முகாமைத்துவ பொறுப்பு சட்டத்தின் அடிப்படையில் நாட்டின் நிதி நிலைமை மற்றும் பொருளாதார திட்டங்கள் குறித்து காலத்திற்கு காலம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் 23ம் திகதி இவ்வாறான ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை முற்று முழுதாக மாற்றமடைந்துள்ளது எனவும் எனவே சரியான தகவல்களை அரசாங்கம் உரிய முறையில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு உதவிகள், கடன்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென ரணில் விக்ரமசிங்க ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.