https://s3.amazonaws.com/adaderanatamil/1590403251-1590402297-atalugama-case_l.jpg

அத தெரண ஊடகவியலாளரை அச்சுறுத்திய 5 பேர் விளக்கமறியலில்

அத தெரண ஊடகவியலாளரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நேற்று இரவு (24) கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் நாளைய தினம் வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளர்.

பாணந்துறை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம, அடலுகம பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற அத தெரண ஊடகவியலாளரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நேற்று இரவு குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.