
நடிகர்களின் சம்பள விஷயத்தில் தலையிட முடியாது : அமைச்சர் கடம்பூர் ராஜூ
சென்னை : நடிகர்களின் சம்பள விஷயத்தில் தலையிட முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார் .இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'நடிகர்களின் சம்பள விஷயத்தில் தலையிட முடியாது என்பது ஆர்.கே. செல்வமணிக்கு தெரியும். தயாரிப்பாளர்கள், திரையரங்கம், நடிகர் சங்க பிரதிநிதிகள் பேச ஏற்பாடு செய்தால் அரசு உதவும். கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே திரையரங்கு திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார்,'என்றார்.