http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__602352321147919.jpg

விமானத்தின் நடு இருக்கையிலும் பயணிகளை ஏற்றி வர 10 நாட்களுக்கு மட்டும் அனுமதி: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : விமானத்தின் நடு இருக்கையிலும் பயணிகளை ஏற்றி வர 10 நாட்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இன்று முதல் இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்படி ஆரம்பித்துள்ள விமான சேவையில், அனைத்து இருக்கைகளிலும் பயணிகளை அழைத்துச் செல்லப்படுகின்றனர். கொரோனா முடியும் வரை விமானத்தின் நாடு இருக்கையை காலியாக வைத்து இயக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. விமானி தேவன் கனானி என்பவர் முன்பை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்தார். அதில், சான்பிரான்ஸிஸ்கொ மற்றும் மும்பை இடையிலான விமானத்தில் நாடு இருக்கையிலும் பயணிகளை ஆற வைத்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வந்த போது உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏர் இந்தியா விமானத்தில் நாடு இருக்கைகளை காலியாகி வைத்து இயக்க வேண்டும் என உத்தரவிட்டது. மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏர்இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஜூன் 16 ஆம் தேதி வரை பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாடு இருக்கையில் பயணிகளை ஏற்றி வர 10 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.