https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/original/harbhajan1xx.jpg

எனக்கு வயதாகி விட்டது எனத் தேர்வுக்குழுவினர் கருதுகிறார்கள்: ஹர்பஜன் சிங் வேதனை

by

எனக்கு வயதாகி விட்டது எனத் தேர்வுக்குழுவினர் கருதுவதால் இந்திய அணிக்கு என்னைத் தேர்வு செய்ய மாட்டார்கள் என சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:

ஐபிஎல் போட்டி என்பது பந்துவீச்சாளர்களுக்குக் கடினமானது. உலகின் முன்னணி வீரர்கள் விளையாடுவார்கள், மைதானங்களும் சிறியவை. ஐபிஎல் போட்டியில் நான் நன்றாகப் பந்துவீசுவதால் இந்திய அணிக்காக விளையாடவும் தயாராக உள்ளேன்.

ஆனால் எனக்கு வயதாகி விட்டது எனத் தேர்வுக்குழுவினர் கருதுவதால் இந்திய அணிக்கு என்னைத் தேர்வு செய்ய மாட்டார்கள். மேலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடுவதில்லை. ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து நன்கு விளையாடினாலும் கடந்த நான்கைந்து வருடங்களில் என்னைப் பற்றி தேர்வுக்குழுவினர் யோசிப்பதில்லை. ஐபிஎல் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவையும் டேவிட் வார்னரையும் ஆட்டமிழக்கச் செய்யும் என்னால் சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர்களை ஆட்டமிழக்கச் செய்ய முடியாதா? எதுவும் என் கையில் இல்லை. தற்போதைய இந்திய அணி நிர்வாகத்தில் யாரும் வந்து என்னிடம் பேசுவதில்லை என்றார்.

ஹர்பஜன் சிங், கடைசியாக 2016-ல் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்